திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற வைகாசி விசாக தேர் திருவிழா நடப்பதை போல் தெப்ப தேர் திருவிழாவும் தைப்பூச தேர்த் திருவிழாவும் பாரம்பரியமாக நடந்து வந்த திருவிழாக்களாக இருந்து வந்த நிலையில் கடந்த 1970 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட தெப்ப தேர் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த இந்த ஆண்டு திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 1971 ஆம் ஆண்டில் இருந்து நடைபெறாமல் இருந்த தெப்ப தேர்த் திருவிழாவை நடத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் பொதுமக்களின் விண்ணப்பத்தை  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கவனத்திற்கு கொண்டு சென்று திருவிழா நடத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அறநிலையத்துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், வேகமாக தைப்பூச தேர்த்திருவிழா நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் ஒரு பகுதியாக இன்று கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் தைப்பூச தேர் திருவிழாவை எப்படி நடத்துவது எத்தனை நாள் நடத்துவது பாரம்பரியம் என்ன ஆகம விதிகள் என்ன என்பது குறித்து ஏற்கனவே திருவிழாவை நடத்திய 14 கட்டளைதாரர்கள் மற்றும் கோவில் குழுக்கள் அடங்கிய குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டார். முன்னதாக கண்காணிப்பாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு தேர் திருவிழா நடத்துவது குறித்த தங்களது ஆலோசனைகளை வழங்குமாறு கட்டளைதாரர்களை கேட்டுக் கொண்டார். பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் மற்றும் பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த கட்டளைதாரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் பேசிய அர்த்தநாரீஸ்வரர் கோவில்களின் செயல் அலுவலர் ரமணி காந்தன் கூறியதாவது தேர் திருவிழாவை நடத்த கட்டளைதாரர்கள் வைப்புத் தொகை அவசியம் என்பது எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் முதல் முறையாக நடத்தப்படுவதால் செலவினங்களை கட்டளைதாரர்கள் பகிர்ந்து கொண்டால் தேர் திருவிழாவை நடத்த ஏதுவாக இருக்கும் என கூறினார்.


மேலும் படிக்க | 15 நாட்களுக்குள் 2 முறை பெயரும் சனீஸ்வரரால் கொள்ளை பணம் சம்பாதிக்கப் போகும் ராசிகள் 


நிகழ்ச்சியில் பேசிய நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கூறியதாவது 1971இல் நடத்தப்பட்டு சில பல காரணங்களால் தொடர்ந்து நடத்த முடியாமல் நின்று போன தைப்பூச தேர்த்திருவிழாவில் நடத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சரிடம் கவனத்திற்கு கொண்டு சென்ற போது திருவிழா நடத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப சொல்லி இருந்தார் அதன்படி கொடுக்கப்பட்ட அறிக்கையின் பேரில், திருவிழா நடத்த மாண்புமிகு தமிழக முதல்வர் தான் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களும் கொடுத்த ஒத்துழைப்பை அடுத்து 50 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தைப்பூச தேர்த்திருவிழா, திருச்செங்கோட்டில் நடத்த இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்டளைதாரர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்


இந்த ஆண்டு திருவிழாவை சிறப்பாக நடத்துவது எனவும் தைப்பூச தினத்தன்று தேரை இழுப்பது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார். வரும் 28 ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 05.02.23 தைப்பூசத்திருநாள் அன்று தேர்திரு விழாவை நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-சனி: இந்த ராசிகளுக்கு இது ஜாக்பாட் நேரம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ