விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமித்து எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத படி ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பிறகு காவல்துறை தரப்பில் இருந்து கேட்கப்பட்ட அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு அனுமதி கொடுக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை பணம் உங்களுக்கு வரவில்லையா? அரசு கொடுத்த சூப்பர் அப்டேட்


மழை பெய்தாலும் எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படாத வகையிலும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து திசையிலிருந்து வரும் வாகனங்களையும் நிறுத்தும் அளவிற்கு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் விஜய்யின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது என்று சமீபத்தில் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து இருந்தார். மேலும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தொண்டர்களும் மாநாடு நடக்கும் இடத்தில் நேரில் சென்று ஒவ்வொன்றாக பார்ப்பது கவனித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் தற்போது தனது தொண்டர்களுக்கு மூன்றாவது கடிதத்தை எழுதியுள்ளார்.


"என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள். நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. 



அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி. பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள். மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்" என்று கடிதத்தில் எழுதி உள்ளார்.


மேலும் படிக்க | கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லையா? இந்த எண்களில் புகார் தெரிவிக்கலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ