144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நெல்லை பாபநாசத்தில் தொடங்கியது. இந்த விழா வரும் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. 


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில், 64 தீர்த்த கட்டங்கள், 143 படித்துறைகளில் புஷ்கர பூஜைகள் நடைபெறுகின்றன. இவ்விழா இன்று முதல் துவங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.


தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்காக 3 காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 16 போலீஸ் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் காவல்துறையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.