“ஊரெங்கும் ஊழல்” புகழ் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்றிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து விமர்சித்த தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மேற்கொண்ட துபாய் பயணத்துக்குப் பிறகு தமிழகத்தில் எந்த முதலீடும் வரவில்லை. இப்போதும் அதேபோல் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கூறி வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார் என விமர்சித்தார்.
இதற்கு பதில் அளித்திருக்கும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி திமுகவின் திராவிட மாடல் அரசை குறைகூற எந்த தார்மீக உரிமையும் இல்லாதவர் என சாடியுள்ளார். இதற்கு பல்வேறு காரணங்களையும் அவர் தனது அறிக்கையில் பட்டியலிட்டிருக்கிறார். அதில், " அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியை காலில் போட்டு மிதித்து, வர விரும்பிய தொழில் நிறுவனங்களையும் அண்டை மாநிலங்களுக்கு விரட்டி விட்டு ஆட்சி நடத்தியவர் பழனிசாமி. நான்காண்டு கால ஆட்சியில் “ஊரெங்கும் ஊழல்” என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரராக...கரன்சி மழையில் நனைந்து - ஊழலின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்ந்தவர் பழனிசாமி.
மேலும் படிக்க | டாஸ்மாக்கில் ரூ. 2000 நோட்டை மாற்றும் திமுக...? பதுக்கல் குறித்து பாஜக குற்றச்சாட்டு
தினமும் “எதைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற பாணியில், முதன் முதலில் டாஸ்மாக் கடையைத் தெருவெல்லாம் திறந்த அதிமுக ஆட்சியை மறந்துவிட்டு, அதிமுக ஆட்சியில் கொத்துக் கொத்தாக கள்ளச்சாராயச் சாவுகள் அரங்கேறியதை வசதியாக மறைத்து, 4 ஆண்டு கள்ளச்சாராயம், குட்கா எனத் தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிய பழனிசாமி திமுக ஆட்சி பற்றி குறை கூறுகிறார்.
முதலமைச்சர் பொறுப்பைத் தக்கவைக்கப் பணம், ஓ.பி.எஸ் தகராறில் பொதுக்குழுவைக் கூட்டப் பணம், அதில் மெஜாரிட்டி உறுப்பினர்களைப் பெறப் பணம். வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்றப் பணம், எல்லாவற்றையும் விட, பொதுச் செயலாளர் பதவியைப் பெற “பெட்டி பெட்டியாக” பணம் என கட்சி அரசியலையும், அசிங்கமாக அவர் ஆட்சியில் விட்ட “கான்டிராக்ட் ஊழல்” அரசியல் போல் நடத்திப் பதவியைப் பெற்று, பவனி வந்து கொண்டிருக்கும் பழனிசாமிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தை, முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திமுக ஆட்சியை, திராவிட மாடல் முதலமைச்சரைப் பற்றி குறை கூற தகுதியும் இல்லை. தார்மீக உரிமையும் இல்லை" என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க | வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சேலத்தில் தொடக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ