AMMK வை தனி கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தாா் TTV
டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அமமுகவை கட்சியாக பதிவு செய்தார் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!!
டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அமமுகவை கட்சியாக பதிவு செய்தார் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!!
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டிடிவி தினகரன் தொடங்கினார். ஆனால் அதனை கட்சியாக பதிவு செய்யவில்லை. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிர்வாகிகளுடன் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அமுமுகவை கட்சியாக பதிவு செய்வதற்கான மனுவை வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அளித்தார்.