கார்திக் சிதம்பரம் மீதான வழக்கு திங்கட்கிழமை ஒத்திவைப்பு
அன்னிய செலாவணி மற்றும் பங்குச்சந்தை மோசடி வழக்கில் கார்திக் சிதம்பரத்திற்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்திக் சிதம்பரதிற்கு எதிராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
சுமார் பத்து நாட்களுக்கு முன்னர், சிபிஐ வெளியிட்டுள்ள இந்த லுக் அவுட் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கும்படி கேட்டுக் கொண்டது. மேலும் வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்தது.
சில நாட்களுக்கு முன்பு கார்திக் சிதம்பரம் இல்லத்தில் இது தொடர்பாக ரைட் நடத்தப்பட்டது குறிபிடத்தக்கது.