டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் நான்காவது நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லி ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி தலைமையில் துவங்கியுள்ளது.


ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்துள்ளார். இந்த  கூட்டத்தில், பங்கேற்ற தமிழக முதல்வர் பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தற்கு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொர்பாக அவர் கூறும்போது,,! காவிரி நீரை நம்பியே தமிழகத்தில் பல மாவட்டங்கள் உள்ளன. எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றார். 


மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளை இணைத்து தேசியமயமாக்க வேண்டும். மேற்கில்பாயும் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாற்றில் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 


மேலும், விருதுநகர், ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.