தமிழகம் & புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு இடியுடன் கூடிய லேசானாது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது...!
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தலா 5 செ.மீட்டரும் கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் தலா 4செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. அதே போல் சேலம் மாவட்டம் ஓமலூர், ஏற்காடு, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் உள்ளிட்ட இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவித்துள்ளது..!