இரட்டை இல்லை வழக்கை 4 வாரத்தில் முடிக்காவிட்டால் TTV-க்கு குக்கர்: SC
டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாமா வேண்டாமா என்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!
தமிழகத்தில் R.K.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் டிடிவி தினகரன். இதையடுத்து திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததையடுத்து, காலியான திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் போட்டியிட தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால், தினகரனின் கட்சி தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை, எனவே குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என மறுத்தது.
இதையடுத்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், தேர்தல் ஆணையத்தின் கருத்தையே டெல்லி நீதிமன்றமும் முன்மொழிந்தது. இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு 4 வாரத்தில் முடிக்கப்பட வேண்டும். அப்படி 4 வாரத்திற்குள் வழக்கு முடிக்கப்படவில்லை என்றால் தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.