மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் 6 அடி இடம் தராதோருக்கு தமிழகத்தில் இடம் தரலாமா? என மு.க.ஸ்டாலின் காட்டம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். மண்ணின் மைந்தனாக, கலைஞரை ஈன்றெடுத்த மண்ணிற்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியின் சாதனைகளை சுட்டிக்காட்டினார். கலைஞர் மறைந்தபோது அவரை அடக்கம் செய்ய 6 அடி நிலம் தரமறுத்த அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


மேலும், டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட திமுகவின் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதித்த பகுதிகளை ஒரு வாரம் கழித்து ஹெலிகாப்டரில் வந்துபார்த்ததாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். 


பின்னர் குடவாசல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.