சிறுவாணி ஆற்றில் அணைக்கட்ட மத்திய அரசு கேரளாவுக்கு தடை
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணைக்கட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணைக்கட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது.
அட்டப்பாடியில் கேரளா அணை கட்டும் திட்டத்தை நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அணை கட்டுவது தொடர்பாக மத்திய வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்று திட்டத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மேலும் காவிரி வழக்கில் முடிவு காணும் வரை அல்லது தமிழக அரசு ஒப்புதல் வழங்கும் வரை சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.