மீனவர்களை மீட்க கோரி கடலுக்குள் இறங்கி போராட்டம்!
மாயமானவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி கடலுக்குள் இறங்கி கன்னியாகுமரியில் மீனவர்கள் போராட்டம்.
ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை விரைந்து மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஓகி புயலின் போது கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வந்தாலும் இன்னும் பல மீனவர்களை மீட்கபடாத நிலையில் உள்ளனர்.
எனவே காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக பல இடங்களில் மக்கள் கருப்பு துணிகளை கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை விரைந்து மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் இன்றும் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.