``வட இந்தியாவில் இரவு 10 மணிக்கு மேல் சுத்துங்க`` என காவலர் திட்டியதாக இளம்பெண் புகார்
இரவு கடற்கரையில் நண்பருடன் அமர்ந்திருந்த வடஇந்திய பெண்ணிடம் அங்கு பணியிலிருந்த காவலர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு வடஇந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தை இணைத்து ஒரு புகாரை பதிவு செய்திருக்கிறார். மதுமிதா பைத்யா என்பவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகார் பதிவில், அலுவலக நேரம் முடிந்ததும் நானும் எனது நண்பரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சீ ஷெல் அவென்யூவில் உள்ள கடற்கரையில் நாங்கள் கண்ணியமாகத்தான் அமர்திருந்தோம். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் எங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.
மேலும் படிக்க | ஹோட்டல் மேலாளரை கொடூரமாக தாக்கும் ரவுடிகள் - பதறவைக்கும் வீடியோ
மேலும் எங்களை குற்றவாளிகள் போலவும் தீவிரவாதிகள் போலவும் எங்களிடம் நடந்து கொண்டார். தனது வாகனத்தில் எங்களை ஏறுமாறும் வற்புறுத்தினார். எங்கள் மீது வழக்கு பதிய போவதாகவும் கூறினார். நானும் அவருக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தேன்.
மேலும், கடற்கரையில் உட்காரும் நேரம் குறித்து எந்த அறிவிப்பும் ஏதும் அங்கு இல்லை எனவும் தயவு செய்து அவர்களுக்கு நல்ல முறையில் நடந்துகொள்ள பயிற்சி கொடுங்கள் எனவும் பதிவிட்டிருந்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையில் காவலர்களால் துன்புறுத்தப்பட்டதாக புகார் அளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு டிஜிபி சி சைலேந்திர பாபு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் மதுமிதா பைத்யாவிற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ’ஒரு வேலையும் செய்யல’ ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்த டி.ஆர்.பி ராஜா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR