தமிழ்நாட்டில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து கட்டணம் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ பயணம் செய்யும்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணமும் மக்கள் பயணிக்கும் வாகனத்தை பொருத்து மாறுபடும் என்பது வழக்கம்.


இந்நிலையில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் தூரம், கட்டண முறை உள்ளிட்டவற்றை சீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து நகரங்களுக்கு வெளியே சுங்கச்சாவடியை அமைப்பதில் கவனம் செலுத்தவுள்ளது. சுங்கச்சாவடியில் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் மின்னணு முறையில் கட்டணம் கட்டுவதற்கு வசதி செய்யப்படவுள்ளது. பயணத் தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணத்தை நிர்ணயிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.


இதை தொடர்ந்து, மாதாந்திர அட்டை கட்டணத்திலும் உயர்வு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் போன்ற பணிகள் நடைபெறும் இடத்தில் கட்டணம் முடிவுசெய்யப்படவில்லை. இவற்றுக்கான கட்டணம் பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆத்தூர், பூதக்குடி, சென்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம், பரனூர், வானூர், ஸ்ரீபெரும்புத்தூர், வாணியம்பாடி, சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. GST அமல்படுத்தப்பட்ட பின்னர் சுங்கச்சாவடிகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.