பசுமைவழி சாலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை!!
பசுமைவழி சாலைக்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
பசுமைவழி சாலைக்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
மத்திய அரசின் நிதியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சேலம் முதல் சென்னை வரை 8 வழி பசுமை சாலை அமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சென்னை - சேலம் இடையே 274 கி.மீ. துாரத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைப்பதற்காக பல நிலங்கள் விவசாயிகளிடமிருந்து கையாக படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் இது குறித்து கூறியதாவது...!
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கான எல்லைக்கல் நடப்பட்டிருக்கின்றன. மேலும், 8 வழிச்சாலைக்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றன. எனவே, சாலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை எனவும் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது; மாநில அரசு அதற்கு உதவி செய்கிறது என்றும் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் சேலம் விமான நிலையம் விரிவாக்கம் அவசியம் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, காவிரி விவகாரம் பற்றி அவர் பேசியபோது கூறியதாவது.....!
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்கள் பிரதிநிதிகளை நியமித்து விட்டன. கர்நாடகா மட்டும் பிரதிநிதியை அறிவிக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது. காவிரி முறை படுத்தும் குழு ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும். இதனை ஆணையம் மேற்பார்வையிட்டு நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.