இன்றைய வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலார்ட்..!
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
வட கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளா, கர்நாடகாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்பதால் கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகம். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஆந்திரா, தெலுங்கானா, கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ | இந்தியாவின் முதல் WiFi விமானத்தை அறிமுகம் செய்த விஸ்டாரா...!
மேலும் கேரளா, கர்நாடகாவை ஒட்டிய கடலோர பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையொட்டி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதயால் கர்நாடகா மற்றும் கேரளாவில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
"கடந்த சில மாதங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.