சென்னை அண்ணாநகரில் உள்ள மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் அதிரடி சோதனை  நடத்தினர். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, மசாஜ் நிலைய உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புலன் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றம் வழங்கிய இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நடைபெற்றது. அப்போது மஜாஜ் செண்டர் தரப்பில், சுதந்திரமாக தொழில் நடத்தும் உரிமையில்  காவல்துறை தலையிட முடியாது என்று வாதிடப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும், சோதனையின்போது காவல்துறை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும், ஏற்கனவே மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. தொடர்ந்து நடந்த விவாதத்தில், பாலியல் தொழில் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிக்குத்தான் சோதனை நடத்த உரிமை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.


காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சோதனை தொடர்பான நடைமுறைகளை பின்பற்ற வில்லை என்பதற்காக வழக்கை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருப்பதாக சுட்டிக் காட்டினார். கடந்த 1987ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்றும் அவர் விளக்கமளித்தார்.



மேலும் படிக்க | சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா பிரச்சினையில் 'எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' - வருமானவரி துறை


நியாயமாய் தொழில் நடத்தும் உரிமையில் காவல் துறை தலையிடாது என்றும்,  தவறு நடக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்றும், உரிய நடவடிக்கை எடுத்து அப்பாவி அபலை பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என பல உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  ஒத்தி வைத்துள்ளார்.


மேலும் படிக்க | மீண்டும் மதமாற்ற சர்ச்சை: இந்து கடவுள்களை அவமதித்தாரா ஆசிரியை? மாணவியின் பகீர் குற்றச்சாட்டு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR