43ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது மேட்டூர் அணை!!
மேட்டூர் அணை 43 ஆவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது!
மேட்டூர் அணை 43 ஆவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 39 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்படுப்படுகிறது.
தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு 79 ஆயிரம் கன அடியாக உள்ளது ஒகேனக்கலிலும் அதே அளவு நீர் பாய்வதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் காலையில் 119 புள்ளி 34 அடியாக இருந்தது. அணையில் இருந்து 33 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 43ஆவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.