ஜெ., நினைவிடத்தில் மரணித்த காவலர் வழக்கில் மர்மம் நீடிப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., அவர்களின் நினைவிடத்தில் தற்கொலை செய்துக்கொண்ட அருண்ராஜ் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., அவர்களின் நினைவிடத்தில் தற்கொலை செய்துக்கொண்ட அருண்ராஜ் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்!
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ., அவர்களின் நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்தவகையில் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அருண்ராஜ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் அருண்ராஜ் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அருண்ராஜ்-ன் தாடையை தொட்ட துளைத்த நிலையில் அவர் மரணித்துள்ளார்.
அருண்ராஜ் தற்கொலை நோக்கத்துடன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா? அல்லது தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாரா? என்ற பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அருண்ராஜ் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் இல்லை எனவும், நேற்றிரவு தன்னுடன் வழக்கம்போல பேசியதாகவும் அவரது தந்தை மலைராஜன் தெரிவித்துள்ளார்.
தன் மகன் திடீரென மனம்மாறி தற்கொலை செய்துக்கொள்வதர்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ள அவர் தனது மகனின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அதவை விரைவில் கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.