கல்லூரி மாணவி பலி: பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய விளக்கம்!
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சியின் போது பயிற்சியாளர் கீழே தள்ளிவிட்டதில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
தேசிய பேரிடர் மேலாண்மையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் 20 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். கல்லூரியின் மாடியில் இருந்து மாணவர்கள், மாணவிகள் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவி லோகேஸ்வரி என்பவர் மாடியில் இருந்து குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். பயப்படாமல் கீழே குதிக்கும்படி பயற்சியாளர் ஆறுமுகம் அவரை கூறினார். ஆப்போது லோகேஸ்வரியை பயிற்சியாளர் கீழே தள்ளிவிட்டார். அதில் எதிர்பாராத விதமாக முதலாவது மாடியின் சன் சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து மாணவி லோகேஸ்வரி சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே மாணவியின் உயிர் பிரிந்தது. இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில்:-
கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் எதிர்பாராமல் நடைபெற்றது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
முக்கியமாக, தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளவில்லை. இந்த பயிற்சிக்கும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை. கோவை கல்லூரியில் பயிற்சியளித்தவர் எங்களிடம் முறையாக பயிற்சிபெற்றவர் வில்லை.
என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.