யூஜிசி அமைப்புக்கு பதிலாக தேசிய உயர் கல்வி ஆணையம் அமைக்க கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த கட்தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது; யுஜிசி-க்கு பதிலாக புதிய அமைப்பை ஏற்படுத்த கூடாது என்றும் தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். 


மேலும், தற்போதைய யுஜிசி அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் பல்வேறு திறன்களை மேம்படுத்திடும் யுஜிசி, நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் நேர்மையாக யுஜிசி செயல்பட்டு வருவதாகவும் அதிகாரம் மாற்றப்பட்டால் 100 சதவீதம் நிதியுதவி குறைந்திடும் வாய்ப்பு ஏற்படலாம் எனவும் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும்,  மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீடு 60லிருந்து 40ஆக  குறையும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.