ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர்.


மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக 'நமது புரட்சித்தலைவி அம்மா' என்ற நாளிதழும் வெளியிடப்பட்டது. 


பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-


ஜெயலலிதா இயக்கத்தை கட்டிக்காத்து நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார்கள். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பிரிந்திருந்த அதிமுகவை ஒன்றிணைத்தார் ஜெயலலிதா. இந்தியாவிலேயே ஒரு கட்டுப்பாட்டோடு உள்ள இயக்கம் அதிமுக என்பதை ஜெயலலிதா நிரூபித்தார். இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக கட்சியை வழி நடத்திய ஒரே தலைவர் ஜெயலலிதா தான்.


ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.  நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம்.  எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது.  எனக் கூறினார்.


பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது அவர் கூறியதாவது;-


அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அவை வெடித்து சிதறுவதை நம் கண்முன்னே பார்க்கதான் போகிறோம் என்றார்.


ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள், அதிமுகவை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கிக் கிடக்கின்றன எனக் கூறினார்.


மேலும் அவர், அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்கத் தொடங்கியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.