2017 ஆம் ஆண்டு முதல், மூன்றரை ஆண்டுகளாக, அதிமுகவிலிருந்து பிரிந்த சென்ற சசிகலா தரப்பு அமமுக கட்சி தினகரனையும் கட்சிக்குள் இருந்த பிரச்சனைகளையும் திறமையாக கையாண்டு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு (Edapaadi K Palanisamy), இப்போது, ஓபன்னீர் செல்வத்தினால் (O.Panneer Selvam)  குடைச்சல் ஆரம்பிப்பது போல் தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறிது நாட்களாகவே, அதிமுகவில் தோன்றியுள்ள விரிசல்கள், கொஞ்சம் வெளிப்படையாகவே தெரிகின்றன.


எடப்பாடி பழனிச்சாமி (EPS) தரப்பை சேர்ந்தவர்கள் தான் அமைச்சரவையில் 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளனர், என்றாலும், சட்ட மன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், யார் முதலமைச்சர் வேட்பாளர் என அறிவிக்க முடியாத நிலை தான் உள்ளது.


இரண்டு முறை எடப்பாடி பழனிச்சாமி தான் முதலைலைச்சர் வேட்பாளர் என அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, அந்த முயற்சி ஓபிஎஸ் தரப்பினரால் முறியடிக்கப்பட்டது.


அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. 


முதல்வர் போட்டியிலிருந்து விலகுவதற்கு OPS தயாராக உள்ளார். ஆனால், அதற்கு பதிலாக,  அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்த அதிமுக பொதுச் செயலாளர் என்ற பதவி வேண்டும் என நிபந்தனை விதிப்பதாக தெரிகிறது.


ALSO READ | எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்?


தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கட்சி தொடர்பான எந்த அறிவிப்புகளிலும் கையெழுத்திடப் போவதில்லை என்று இ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு ஓ.பி.எஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.


துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் அமைச்சரவையிலிருந்து விலக OPS திட்டமிட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை இரவு வதந்திகள் வந்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் சில AIADMK மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை சமாதானப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, தனது சொந்த காரில் தனது சொந்த மாவட்டமான தேனிக்கு மேற்கொள்ளும் பயணத்தைத் தவிர்க்க OPS முடிவு செய்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 


சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் ஏழு மாதங்கள் இருக்கும்போது முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிப்பதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என ஆச்சரியமாக உள்ளது  எனவும் சில கட்சி தலைவர்கள் சிலர் கூறியதாகவும் கூறப்படுகிறது


இருப்பினும், புதன்கிழமை துணை முதல்வர், சென்னை மாநகராட்சி மாம்பாட்டு ஆணையத்தின் மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது எடப்பாடி தரப்பிற்கு சிறிது ஆறுதலான விஷயம். 


அக்டோபர் 7 ஆம் தேதி காலக்கெடுவுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்பதில் அதிமுக தலைவர்கள் மற்றொரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.


இதற்கிடையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை அடுத்த முதல்வர் வேட்பாளராக அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என்றும், அதிமுக தலைவர்களிடையே பிளவு ஏற்படுத்த ஊடகங்கள் முயற்சிப்பதாக  குற்றம் சாட்டினார்.


ALSO READ | தேர்தலுக்காக திமுக கையில் எடுக்கும் இந்தி எதிர்ப்பு உத்தி... கை கொடுக்குமா... காலை வாருமா...!!!


 


அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலம் தர்ம யுத்தம் பார்ட்-2 தொடங்குமா அல்லது அதிமுக ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR