ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில கசிவு நாளை பிற்பகலுக்குள் சரி செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.


இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது. மேலும் கடந்த மே 28 தமிழக முதல்வர் உத்தரவின்படி, ஸ்டெர்லைட்  ஆலை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அன்றே ஸ்டெர்லைட் ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.


இந்நிலையில், தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில்:-


தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையின் கந்தக அமில கசிவு நாளை பிற்பகலுக்குள் சரி செய்யப்படும். கந்தக அமில கசிவால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது, பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆலையில் உள்ள கந்தக அமிலம் பாதுகாப்புடன் அகற்றப்படும் எனறு  தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.