சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 1118 கொரோனா வழக்குகள் மற்றும் 39 பேர் இறந்துள்ளனர்.  இதன் மூலம், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11933 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இந்த தொற்றுநோயால் மொத்தம் 392 பேர் இறந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் 38 புதிய கோவிட் -19 தொற்று பதிவு செய்துள்ள நிலையில், மாநிலத்தில் 22 மாவட்டங்களை கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களாக (Hotspots) மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி 214 பேர் பாதிப்பு, கோயம்புத்தூரில் 126 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 


இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ் இன்று முதல் மலிவு விலை மளிகை பொருட்கள் வழங்கப்படும். மே மாத விலையில்லா ரேஷன் பொருட்கள் தினமும் 150 பேருக்கு டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும் எனக் கூறினார்.