அதிமுகவின் ஆட்சி தானாகவே கவிழும்: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-
தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் அது போன்ற முயற்சியில் நான் துளியும் ஈடுபடவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சி தானாகவே கவிழும்.
எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல விவகாரங்களில் அதிமுக-வினர் இடையே கடும் போட்டா போட்டி நிலவுவதாக கூறினார்.
மேலும் அரிசி, பால் உள்ளிட்ட கலப்படங்களை தடுக்க ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.