சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 


இது தொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் தொடங்கிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம் , பவானி சுப்பராயன் அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில், முதற்கட்டமாக நிலத்தை கையகப்படுத்த நீதிபதிகள் தடை விதித்தனர். 


இந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு விசாரணை செய்து வந்தது. இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அந்த தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம் , பவானி சுப்பராயன் அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைக்கும் பொருட்டு, தமிழக அரசு மக்களிடம், நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


மேலும், "இத்திட்டத்தில் மக்களிடம் நேரடியாக கள ஆய்வு நடத்த வேண்டும். சுற்றுப்புற சூழல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை பெறவேண்டும். அதன்பிறகே இத்திட்டம் செய்லபடுத்த முடியும். இத்திட்டம் அவசரகதியில் செயல்படுத்தப்படுகிறது. கள ஆய்வு முறையாக நடத்தப்படவில்லை. அடுத்த 8 வாரங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை முறையாக அதன் உரிமையாளர்களிடம் அளிக்க வேண்டும். சுற்றுசூழல் அறிக்கை பெற்ற பிறகே, நிலம் கையகப்படுத்துதல் செய்ய வேண்டும். இவையெல்லாம் முடிந்தபிறகு, புதிய அரசாணையையும் வெளியிடவேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.