நீட் பயிற்சியை தமிழக அரசு சிறப்பாக அளித்து வருகிறது -செங்கோட்டையன்!
நீட்தேர்வுக்கு தனியார் மையங்களைவிட தமிழக அரசு சிறப்பான பயிற்சியை அளித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீட்தேர்வுக்கு தனியார் மையங்களைவிட தமிழக அரசு சிறப்பான பயிற்சியை அளித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையன் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் தங்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும் எனறும், மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி மனு அளிப்பதற்காக பணிவாய்ப்பை இழந்த பலர் சென்றனர்.
அவர்களைத் தடுத்த போலீசார் தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் அவர்களை அழைத்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு அரசு சிறப்பான பயிற்சிகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். தனியார் நிறுவனங்களைப் போல அரசினால் சிறப்பான பயிற்சி அளிக்க முடியுமா என்ற சந்தேகம் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.