அம்மனுக்கே சுடிதார் போட்டு டிரென்டாக்கிய 2 அர்ச்சகர்கள்!
அம்மன் சிலைக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்த இரண்டு குருக்கள் பணிநீக்கம்.
மயிலாடுதுறை 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பாள் ஆலய அம்மன் சிலைக்கு சுடிதார் அணிவிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக 2 அர்ச்சகர்களையும் பணிநீக்கம் செய்துள்ளனர்.
ராஜ் என்ற அர்ச்சகர் அம்மனுக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது. முன்பே இந்தச் சம்பவம் நடந்த நிலையில், தற்போது வாட்ஸ் அஃப்-பில் அம்மன் சுடிதார் அணிந்துள்ள காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. 7-ம் நூற்றாண்டில் சுயம்புவாக உருவெடுத்த அபயாம்பிகைக்கு சுடிதார் அணிவித்து பூஜை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என பக்தர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவாடுதுறை ஆதீனம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அம்மனுக்கு சுடிதார் அணிவித்த விவகாரத்தில் 2 அர்சகர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆகம விதிகளுக்கு புறம்பாக அலங்காரம் செய்ததால் திருவாவடுதுறை ஆதீனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.