உலக சாதனைக்கான விராலிமலை ஜல்லிக்கட்டை இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனைக்காக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 2000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர்,சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


அப்போது ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி முதல்வர் பழனிசாமி:-


 தமிழர்கள் என்றால் வீரம். அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகள் வரிசையில் விராலிமலையும் இடம்பெறும் அளவிற்கு பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டு நடத்தப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த போட்டி நடக்க உள்ளது. 


கின்னஸ் சாதனை மதிப்பீட்டு குழு நிர்வாகிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த 3 காளைகள் மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்கள் 3 பேருக்கு கார்கள், இருசக்கர வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பிரிட்ஜ், சைக்கிள் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட உள்ளன.