தேனி விஜய் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் அந்த போஸ்டரில், 30  ஆண்டுகாலமாக சினிமா துறையில் வெற்றி, அடுத்த 30 ஆண்டுகள் அரசியலில் வெற்றி, நாளைய முதல்வர் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் கடந்த 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அறிமுகமாகி தற்போது வரை 30 ஆண்டுகள் திரைத்துறையில் நிறைவு செய்திருக்கிறார். இதனை தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றத்தினர் கொண்டாடி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தீ தளபதி... வாரிசு இரண்டாவது சிங்கிள் வெளியானது


இந்த கொண்டாட்டத்தில் தேனியில்  தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் 30 ஆண்டுகாலம் சினிமா துறையில் சாதித்த விஜய், வரும் 30 ஆண்டுகாலம் அரசியலில் சாதிப்பார் என்றும் நாளைய முதல்வர் விஜய் என்று போஸ்டர்கள் ஒட்டி விஜய் அரசியல் களம் காண்பார் என்றும் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். மற்றொரு போஸ்டரில் நாளைய முதல்வர் விஜய், புஸ்லியானந்த் நாளை அமைச்சர், தேனி மாவட்ட நிர்வாகிகள் நாளைய சட்டமன்ற உறுப்பினர்கள் என்றும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.


இவர்கள் ஒட்டிய போஸ்டரால் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதை பொதுமக்கள் வெளிப்படுத்தும் விதமாகவும் தளபதி மக்கள் இயக்கத்தினரின் அரசியல் கனவை வெளிப்படுத்தும் விதாகவும் உள்ளது. ஏற்கனவே வாரிசு படத்திற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் விஜய் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் இந்த போஸ்டர் சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.


மேலும் படிக்க | Old Income Tax Regime Vs New: இரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ