அதிமுகவில் எந்தவித குழப்பமும் இல்லை; சிறப்பாக செயல்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டையின் வனத்துறை சார்பாக பராமரிக்கப்பட்டு வரும் வனப்பகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் மயில்கள் சரணாலயம் அமைப்பது குறித்து ஆய்வு செய்து, முடிவு எடுக்கப்படும் என்றார்.


பின்னர் அரசியல் ரீதியிலான கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், இரட்டை தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாகக் கூறியதுடன், 2021 சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு முன்பு சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தாலும் அவர் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும் என்றார்.


சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் கட்சியில் எப்போதும் இடம் கிடையாது எனக் கூறிய திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவின் ஆட்சியை அழிப்பேன் என்று பிரிந்து போய், கட்சி தொடங்கிய தினகரனின் கதி என்ன ஆனது என்பதை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பார்த்து விட்டார்கள் என்றும் கூறினார்.


இதையடுத்து, செய்தியாலர்களிடன் அவர் கூறுகையில், அதிமுகவில் எந்தவித குழப்பமும் இல்லை; கட்சியும், ஆட்சியும் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில்  சிறப்பாக செயல்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.