அதிமுக உடன் அமமுக இணைவது தற்கொலைக்கு சமமான ஒரு நிகழ்வு என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமமுக-வில் இருந்து செந்தில் பாலாஜி விலகி மீண்டும் திமுக-வில் சமீபத்தில் இணைந்தார். இதைத்தொடர்ந்து அமமுக உறுப்பினர்கள் தாய் கட்சியான அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் இன்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடன் பேசினார்.


திருச்சியில் செய்தியாளர்களிடன் பேசிய அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து தெரிவிக்கையில்...  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக-வுடன் என்றுமே இணையாது. அது தற்கொலை முயற்சி செய்வதற்கு சமம். அப்படி இணையவும் வாய்ப்பும் இல்லை. ஆட்சிக்கு பின்னர் அதிமுக-வே இருக்காது. ஏனென்றால் 90% அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என தெரிவித்தார்.


பிரதமர் வேட்பாளராக ராகுலை திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்மொழிந்தது குறித்து கேட்டதற்கு., ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு. பாஜக-விற்கு எதிராக வலுவான அணி உருவாகக்கூடாது என்பதற்காகதான் ஸ்டாலின் இவ்வாறு செய்கிறார் என தெரிவித்தார்.


அரசியலில் தவறான முடிவெடுக்கும் கட்சிகள் வீழ்ச்சியை சந்திக்கும். அப்படிதான் தேமுதிக வீழ்ந்தது எனவும் அவர் தெரிவித்தார்.


மேலும்., கூட்டணி இல்லை என நீண்ட காலமாக கூறப்பட்டு வந்த அமமுக-திமுக ரகசிய கூட்டணி ஒரு வதந்தி. திமுக-வுடனும் சரி, அதிமுக-வுடனும் சரி கூட்டு என்பது கிடையாது என உறுதிப்படுத்தினார்.