அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாக பல்வேறு தனியார் ஆய்வு நிறுவனங்கள் கணித்துவருகின்றன. மேலும் இது வட தமிழக கடலோரப் பகுதியில் கரையை கடக்கலாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய்ய இயக்குநர் இன்று செய்தியாளர்களை சந்திக்கையில்...


"தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடித்து வருகிறது. இதன் தாக்கத்தால், இப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெறக்கூடும். இதன்காரணமாக அதன் நகர்வை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.


இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோரப் பகுதியில் இல்லாததால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்" என தெரிவித்துள்ளார்.