தண்ணீர் கேட்டு போராட திமுகவுக்கு தார்மீக உரிமையில்லை; ஜோலார்பேட்டை நீர் தண்ணீர் வரக்கூடாது என்பது சென்னை மக்களுக்கு செய்யும் துரோகம் என அமைச்சர் ஜெயகுமார் காட்டம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டை சீர் செய்ய முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார். 


கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; "தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. பற்றாக்குறைதான் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது. மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் தர முடியாது என திமுக கூறுவது தவறு. அது திமுக மக்களுக்கு செய்யும் துரோகம்" என அவ தெரிவித்தார்.