ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி.
மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை அவனியாபுரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் தொடங்கி வைக்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட 623 மாடுபிடி வீரர்களில் 576 பேர் ஜல்லிக்கட்டில் தேர்வு செய்யப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் 61 காளைகள் நிராகரிக்கப்பட்டது. 643 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 643 வீரர்கள், 430 காளைகள் பங்கேற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முடக்கத்தான் மணி என்பவர் முதல் பரிசு வென்றார்.
ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியார்களிடம் கூறியதாவது:
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. போதிய வெளிச்சமின்மை, பாதுகாப்பு காரணங்களுக்காக நேரத்தை நீட்டிக்க முடியவில்லை. அவனியாபுரம் போன்று பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நடைபெறும்.