என் மீதும் திருவள்ளுவர் மீதும் BJP சாயம் பூச முயற்சிக்கிறார்கள் - ரஜினிகாந்த்
திருவள்ளுவரைப்போல் எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்..!
திருவள்ளுவரைப்போல் எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்..!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து பாலச்சந்தரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தா நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில்; " திருவள்ளுவரைப்போல் எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுவதாகவும், காவி சாயத்திற்கு திருவள்ளுவரும், நானும் மாட்ட மாட்டோம் என்றும் தப்பித்து விடுவோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என குறிப்பிட்டார். பாஜகவில் சேருவதற்கு எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை என்றும், பொன்.ராதாகிருஷ்ணனிடம் பாஜகவில் இணைவது குறித்து நான் பேசவில்லை என்றும், என்னை பாஜக உறுப்பினராக காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்த அவர், எவ்வளவோ பிரச்சனைகள் மத்தியில் அதனை ஒரு பெரும் சர்ச்சையாக உருவாக்கியது தேவையில்லாதது என குறிப்பிட்டார்.