மகராஷ்டிரத்தை போல தமிழக அரசும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-


மராட்டிய மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததை போல தமிழக அரசும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழக முதல்வர் இதனை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 


பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் வறட்சி பாதிப்பு அதிகமாக உள்ளதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது அவசியம் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.