TN Latest News Updates: அனைத்திந்திய பாங்க் ஆஃப் பரோடா ஒபிசி தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் கருத்தரங்கம் சென்னையில் இன்று (மே 26) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஓபிசி கூட்டமைப்பின் தலைவர் அமித் ஜாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன்,"ஓபிசி சமூகத்தினரை மதத்தின் பெயரால் வெறும் வாக்கு வங்கியாக  மட்டும் பயன்படுத்தக் கூடிய பாஜக அரசை  அனைவரும் அறிவோம். இந்த சூழலில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ஆகிய பகுஜன் சமூகத்தினர் ஒற்றுமை முக்கியமானது. 


பகுஜன் ஒற்றுமை


இட ஒதுக்கீடுக்கும், சமூகநீதி கோட்பாட்டிற்க்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். சமூகநீதி கோட்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதை இந்த மாநாட்டில் நான் வலியுறுத்தி உள்ளேன்.


மேலும் படிக்க | கோவிலில் அன்னதானம் பிரியாணி போட்டு மத நல்லிணக்கத்தை நிலைநாட்டிய இஸ்லாமியர்கள்!


ஓபிசி சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டிற்காகவும், பகுஜன் ஒற்றுமைக்காகவும் முன்னால் பிரதமர் வி.பி சிங், கான்ஷியராம், வி.பி மண்டல் போன்றவர்களை நாம் மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் பிரதமர் ஆற்றுகின்ற உரை மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதை உணர முடிகிறது. பிரதமர் மோடி அண்மை காலமாக பேசி வருகிற கருத்துகள் அவர் மிகவும் பதட்டத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.


'பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி'


குறிப்பாக இந்து சமூகத்தின் தாலியைப் பறித்து இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் கட்சியினர் ஒப்படைத்து விடுவார்கள் என்று பேசுவதும் சரி, ராமர் கோவிலை புல் டவுசர் வைத்து இடித்து விடுவார்கள் எச்சரிக்கையாக  இருங்கள் என்று சொன்னதையும் சரி, அடுத்தடுத்து அமித் ஷா போன்றவர்கள் பேசி வருகிற கருத்துகளையும் சரி அவர்கள் ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் பதட்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஆகவே ஜூன் 4ஆம் தேதி வெளியாக இருக்கின்ற தேர்தல் முடிவுகள் பாஜக ஆட்சியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.


இந்தியா கூட்டணியில் இலக்கு இல்லை குழப்பம்தான் இருக்கிறது என்ற பிரதமர் மோடியின் கருத்திற்கு பதில் அளித்த தொல் திருமாவளவன்,"அவர்தான் குழப்பத்தில் இருக்கிறார். ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்குவார்கள் என பிரதமர் கூறுவது ஒரு வகையில் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பதில் என்ன தவறு..?  ஒரே கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் உறுதியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்கும். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை. அப்படி வந்தால் அதை ஆதரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.


மேலும் படிக்க | உயிரைப்பறித்த டீன்-ஏஜ் காதல்! கடற்கரையில் ஒதுங்கிய 2 பிணங்கள்..கொலையா? தற்கொலையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ