ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக எழுச்சி மாநட்டையொட்டி சென்னையில் இருந்து மதுரையை நோக்கி தொடர் ஜோதி ஓட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நடைப்பயணத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சென்னையில் இருந்து மதுரையை நோக்கி பயணிக்க உள்ளனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், " நீட் தேர்வு தோல்வியால் மாணவன் மற்றும் அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் மன வேதனை அளிக்கிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ஒழிப்பாகவே இருக்கும் என கூறியிருந்தார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் உள்ளது. ஆனால் இதற்கு எத்தனை முறை திமுக அழுத்தம் கொடுத்தது?. பாராளுமன்றத்தில் நீட் தொடர்பாக  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன  குரல் கொடுத்தார்கள்?.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் ஸ்டாலின்... உச்சமடையும் நீட் விவகாரம்!


நீட், கச்ச தீவு உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த ஒரு உரிமையை மீட்டெடுப்பதற்காகவும் திமுகவினர் குரல் கொடுக்கவில்லை. கைகளில் பேண்ட் கட்டுவது, ஜாதி அடையாளத்தை அணிவது போன்றவை அம்மா ஆட்சியில் நடந்ததா?. யார் இவ்வாறு செய்தாலும் அவர்களை கைது செய்தால் மட்டுமே இது போன்ற செயல்கள் நடைபெறாது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மொழிவாரியாக ஜாதி வாரியாக இன வாரியாக யாரும் பேசியதில்லை. வாயை மூடிக் கொண்டிருந்தார்கள். எப்ப எல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறது அப்போதெல்லாம்  ஆளுங்கட்சி துஷ்பிரயோகம் ஒரு பக்கம், ஜாதி கலவரம் ஒரு பக்கம் உள்ளது.


யார் என்று குற்றவாளியை வெளிப்படையாக அறிந்து குற்றவாளி சிறையில் அடைக்கப்பட வேண்டும். குழுவை உருவாக்கி என்ன ஆகப் போகிறது. உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை திருநாவுக்கரசு செய்திருக்கிறார். வரலாற்றுத் சம்பவத்தின் உண்மை தன்மையை மறைத்து பேசும் திருநாவுக்கரசின் செயல் வருத்தத்திற்கு உரியது. பெண்ணென்றும் பாராமல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஆபாச வார்த்தைகளை பேசி மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள். அதனால் சட்டமன்றத்தில் விட்டு வெளியேறினார் முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதா. ஒரு பெண்ணை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்திய துரியோதன, துச்சாதன கும்பல் தான் இன்று திமுக கும்பல். 


ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட்டை ஒழிப்பதாக இருக்கும் என்று சொன்னார்கள். அந்த சூட்சமம் எங்களுக்கு தான் தெரியும் என்றெல்லாம் சொன்னார்கள். அதற்கான கையெழுத்தை முதலில் போட்டிருக்க வேண்டியதுதானே. குரோம்பேட்டில் நடைபெற்ற தற்கொலைகள் நீட்டுக்காக மனதை பதை பதைக்க செய்கிறது. திமுக உரிமையை மீட்டெடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவே இல்லை" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக குற்றம்சாட்டினார்.


மேலும் படிக்க | செந்தில் பாலாஜியின் தம்பி கைது இல்லை - அமலாக்கத்துறை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ