முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்.. சாலை மறியலில் பெண்கள்
முறையாக குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருபுறங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நல்லவன்பாளையம் கிராமத்தில் சுமார் 5,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த கிராமத்தில் இதுவரை தண்ணீர் பஞ்சமே வராத ஒரு கிராமம் ஆகும், ஏனென்றால் திருவண்ணாமலையில் இருந்து திருவண்ணாமலை நகருக்கு சாத்தனூர் அணை கூட்டு குடிநீர் திட்டம் இந்த வழியாகத்தான் வரும், 24 மணி நேரமும் தண்ணீர் வரக்கூடிய நிரந்தர குழாய்கள் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தது, அதுமட்டுமின்றி ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருக் குழாய்கள் அமைக்கப்பட்டும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
தற்பொழுது திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லம் சாலையை நான்கு வழி சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் நிரந்தரமாக தண்ணீர் வழங்கக்கூடிய சாலை ஓரத்தில் இருந்த குழாய்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது, அதுமட்டுமின்றி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களும் பூமிக்குள் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால் நல்லவன்பாளையம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக குடிதண்ணீர் வராமல் கிராம மக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
நல்லம்பாளையம் கிராமத்தில் உள்ள ஐஏஎஸ் நகர், பௌர்ணமி நகர், முருகர் பாளையம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து குடிநீர் வராததால் ஆத்திரமடைந்து திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை வந்த காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் தருவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
குடிதண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ