தை பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதான்! விவரம் உள்ளே!
தை மாதத்தின் முதல் நாள் நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தை மாதத்தின் முதல் நாள் நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மண்ணையும் அது தரும் வளத்தினையும் கொண்டாடவே உருவானது பொங்கல் திருவிழா. பொங்கல் பண்டிகை அன்று விரதம் இருந்து சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவானுக்கு படையல் வைத்து வழிபாடு செய்த பின்னர் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம்.
நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வழிபடப்படும் நாள்தான் இது.
மங்கலம் பொங்க மனையில் பால் பொங்கும் பொழுது “பொங்கலோ பொங்கல்.. மகர சங்கராந்திப்பொங்கல்” என்றும் மூன்று முறை சொல்லிப் பலவிதமான காய்கறிகளை சேர்த்துக் கூட்டுக்குழம்பு வைத்து, அதனை சூரிய பகவானுக்கு படைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கலும், வெள்ளைப் பொங்கலும் வைப்பது நம்மவர்களின் மரபு. கூட்டாக ஒற்றுமையுடன் வாழ கூட்டுக்குழம்பு வைக்க வேண்டும்.
இந்நிலையில் பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 6.15 மணி முதல் 7.15 மணிக்குள் அல்லது காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.