சுற்றுச் சூழலுக்கு உகந்ததும், குறைந்த செலவும் கொண்ட சானிட்டரி நாப்கின்களை மதுரையைச் (Madurai) சேர்ந்த 42 வயது பெண்மணி டி.கண்ணாமா (T Kannama) உருவாக்கியுள்ளார். இந்த சானிட்டரி நாப்கின்-ல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண்ணமாவின் கூற்றுப்படி, அவள் உருவாக்கிய நாப்கின் நான்கு-ஆறு மணி நேரம் தாக்குப்பிடிக்கும் தண்மை கொண்டது. வேப்ப மரத்தின் பொருட்கள், கற்றாளை, திரிபலா தூள் உள்ளிட்டவற்றைக் கலந்து பாக்டீரியா எதிர்ப்பு தண்மை கொண்டதாக இதனைத் தயாரித்துள்ளார் கண்ணம்மா. 


"சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தாத சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க விரும்பினேன். து 100 சதவீதம் பருத்தியால் தயாரிக்கப்பட்டது. இதில் எந்த ரசாயனமும் சேர்க்கப்படவில்லை" என்று ANI செய்தி நிறுவனத்திற்கு அவர் தெரிவித்தார். 


இயற்கைக்கு உகந்த சுகாதார நாப்கின்கள் ஒரு பெண்ணுக்கு உணவு மற்றும் தண்ணீரைப் போலவே முக்கியம் என்றும் அவர் கூறினார்.


“நான் மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். என் ஆர்வம் அதிகரித்தவுடன், நான் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து மாதவிடாய் சுகாதாரத்தில் ஏதாவது செய்ய நினைத்தேன். மாதவிடாய் சுகாதாரம் குறித்து மாணவர்களிடையே பள்ளியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினேன், பெண் மாணவர்கள் துணியைப் பயன்படுத்தும்போது அவர்கள் எவ்வாறு சிரமப்படுகிறார்கள் என்பதைக் கற்றுக்கொண்டேன். சிலருக்கு நாப்கின் வாங்கப் பணம் இல்லாததால் அவர்கள் மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கே வருவதில்லை" என்றார். 


சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாதவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு, பின்னர் சுற்றுச் சூழலுக்கு உகந்த நாப்கின்களை தொழில் ரீதியாக கண்ணம்மா தயாரித்து வருகிறார்.