பாஜக-விற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்ட சோபியா-விற்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் குற்றாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணித்தார். இந்த விமானந்தில் பயணித்த மாணவி 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என கோஷமிட்டார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார். 



இதனால் அதிருப்தி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். 


இந்த புகாரின் பேரில் மாணவி சோபியா நேற்று மாலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படார். இதனையாடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.


இதனையடத்து தனக்கு ஜாமின் வழங்குமாறு தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாணவி சோபியா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நடத்திய தூத்துக்குடி நீதிமன்றம் மாணவி சோபியாவிற்கு ஜாமின் வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு அவரது பெற்றோர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.


முன்னதாக விமானத்தில் என்ன நடந்தது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது...


"விமானத்திற்குள் என்னை நோக்கி பாஜக-வை கடுமையாக விமர்சித்தார் சோபியா.


பாதுகாப்பு கருதி விமானத்தின் உள்ளே நான் எதுவும் பேசவில்லை. விமானத்தை விட்டு இறங்கியதும் கூட நான் ஏதும் பேசவில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற காரணத்தால், இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடன் நடந்தவற்றை தெரிவித்தேன். விமான நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


சோபியாவின் பின்புலத்தில் ஏதாவதொரு அமைப்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அவரது சமூக வலைதள பக்கங்களை பார்த்தாலே அவரது பின்புலம் பற்றி அறிந்துக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவினை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.