தூத்துக்குடி நகரில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நரிக்குறவர் இன மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை என எந்த விதமான அடையாளங்களும் இல்லாமல் வசித்து வந்தனர். 


ALSO READ | ஜெய் பீம் படத்தால் அடுத்த சிக்கலில் சூர்யா; 5 கோடி நஷ்ட ஈடு


இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களை கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய பகுதியில் வசித்து வரக்கூடிய நரிக்குறவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். 
அப்போது அவர் அவர்களிடம் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் தங்களுக்கு இல்லை என தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எடுப்பதற்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் விரைவில் எடுக்கப்பட்டு அதில் பசுமை வீடுகளும் கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். 


தங்கள் இருப்பிட பகுதிக்கு நேரில் வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவரை பாசி மாலை அணிவித்து நரிக்குறவர்கள் வரவேற்றனர். மேலும் தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் படி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர் இதைத்தொடர்ந்து பெண் குழந்தைக்கு முருக வள்ளி என பெயர் வைத்தார். தங்களின் கோரிக்கையை கேட்டு உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தமிழக முதல்வருக்கும் நரிக்குறவர்கள் நன்றி தெரிவித்தனர்.


ALSO READ | சூர்யாவை விமர்சித்த அன்புமணிக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR