SterliteGunShoot: அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம்..!
அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு மேலும் 6 மாத கால அவகாசம் கொடுத்தது உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் 100 வது நாள் போராட்டத்தில் கலவரம் நடந்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இவர் கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினார். துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களை ஆய்வு செய்தார். பலியானவர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.
மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் உள்ளிட்ட விபரங்களை பிரமாண வாக்குமூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார். ஆணையத்துக்கு ஏற்கனவே 3 மாதம் அவகாசம் தந்த நிலையில் காலஅவகாசத்தை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இன்னும் விசாரணை முடிவு பெறாத நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் விடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.