முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி சென்னை பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் " வேருக்கு விழா" என்ற தலைப்பில் 1300 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் மற்றும் புத்தாடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு கே.என்.நேரு, எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தயாகம் கவி, பரந்தாமன், வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது பின்வறுமாறு:-


பிறந்தநாள் கொண்டாடுவது அந்த தேதியில் கொண்டாடுவது வழக்கம் ஆனால், அமைச்சர் சேகர்பாபு ஒரு நாள் அல்ல அனுமதி அளித்தால் அடுத்த பிறந்தநாள் வரை கொண்டாடுவார்.  ஒரு கூட்டம் நடத்த சொன்னால் மாதம் முழுவதும் கூட்டம் நடத்துவார். புத்தகம் வெளியீட்டிற்கு விழா நடத்துவார்கள், ஆனால் எத்தனை நிகழச்சிகள் நடக்கவுள்ளது என்பதை புத்தகமாக வெளியிட்டு விழா நடத்துபவர் சேகர்பாபு என பாராட்டு தெரிவித்தார். தலைவரின் பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அந்த கூட்டத்தில் நான் பேசிய போது, நாமெல்லாம் பொறுப்புகளுக்கு வந்ததற்கு  காரணம் தொண்டர்கள்தான். கழக தொண்டர்களுக்கு துணை நிற்போம் என கூறினேன். அதற்கேற்றவாறு இந்த பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  



திமுகவினருக்கு கலைஞர் வேராக இருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறார். மூத்த நிர்வாகிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக அல்ல, பெருமைப்படுத்தவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை இன்னும் வேகமாக ஆற்றிட இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கழக முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யப்படும். 


கம்யூனிச சித்தாந்தம் பேச கூடிய மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவில் கூட கை ரிக்‌ஷா உள்ளது. ஆனால் தமிழகத்தில் மனிதனை மனிதனே இழுக்க கூடாது என்ற அடிப்படையில்  கை ரிக்‌ஷா திட்டத்தை ஒழித்து அந்த தொழிலாளிகளுக்கு சைக்கிள் ரிக்‌ஷாவை வழங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். கண் ஒளித்திட்டம் , பிச்சைகாரர்கள் மறுவாழ்வு திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.  இந்தியாவிலே முதல் முறையாக ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளி எனும் பெயர் மாற்றி நலத்திட்டங்களை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். தன்னுடைய பிறந்தநாளை தனக்காக கொண்டாடாமல் நாட்டு மக்களுக்காக கொண்டாடிய தலைவர் கலைஞர். கலைஞர்  நம்மிடத்தில் இல்லை என்று சொன்னாலும் அவருடைய உணர்வுகள் நம்மிடம் எப்போது உள்ளது என கூறினார்.


ஆட்சி இருந்தாலும் , இல்லாவிட்டாலும்  மக்களுக்க்க பணியாற்ற வேண்டும் என்கிற நோக்கில் திமுகவை அண்ணா உருவாக்கினார். 1949ல் திமுகவை தொடங்கும் போதே முதலமைச்சர் ஆவோம் என்று கூறிவிட்டு கட்சியை தொடங்கவில்லை. ஆனால், இன்று கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதல்வர் என கூறி வருகின்றனர். கட்சி துவங்கி 8 வருடம் எந்த தேர்தல்களையும் சந்திக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு பிறகு 1957 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தலை சந்தித்து 15 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டமன்றத்தில் நுழைந்தோம்.



ஆட்சியமைக்க வேண்டும் என உருவாக்கப்பட்ட இயக்கமல்ல, இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கினார். 1957ல் 15 உறுப்பினர்களோடு சட்டமன்றத்தில் நுழைந்தோம், 1962-ல் எதிர்கட்சியாக உருவெடுத்து, 1967-ல் ஆட்சியை பிடித்தோம். ஆட்சியமைத்த ஒன்றரை ஆண்டுகளில் அண்ணா மறைவிற்கு பிறகு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றார். 1971ம் ஆண்டு 184 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய பெரும்பான்மையோடு ஆட்சி பிடித்தோம். இதுவரை யாரும் அந்தளவிற்கு வெற்றி பெறவில்லை.


மேலும் படிக்க | சமரசமில்லாத சமூகநீதிப் போராளி கலைஞர் கருணாநிதிக்கு இன்று பிறந்தநாள்


ஆட்சியே போனாலும் பரவாயில்லை என ஜனநாயகத்திற்காக, நெருக்கடி நிலையை எதிர்ப்போம் என தீர்மானம் போட்டவர் கலைஞர். தீர்மானம் போடப்பட்ட அடுத்த நாளே ஆட்சியே கலைக்கப்பட்டது. மிசாவில் நான் உட்பட பல பேர் கைது செய்யப்பட்டோம். நான், முரசொலி மாறன் உள்ளிட்ட பல பேர் சிறையில் கொடுமைகளை சந்தித்தோம். 1976-ல் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் 13 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதனை தொடர்ந்து 1989 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை தமிழர்களுக்கு உதவியதாக 2 ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டது. எவ்வளவு சோதனைகள் வந்தாலும் மனப்பூர்வமான அதை ஏற்று செயலப்படும் வல்லமை திமுக முன்னோடிகளை பார்க்கும் போது வருகிறது. தற்போது ஆறாவது முறையாக 2021 ல் ஆட்சி அமைத்து மக்கள் பணியாற்றி வருகிறோம். 


இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 


மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜின் சம்பவம்! விக்ரம் திரைவிமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe