வைகோவுடன் செல்ஃபி எடுக்க விரும்பும் மதிமுகவினர் குறைந்த பட்சம் ரூ.100 நிதி தர வேண்டும்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, கட்சி தொண்டர்கள் யாரும் இனி சால்வை அணிவிக்க கூடாது என்றும், சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம் என்று மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது குறித்து மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்களின் கவனத்திற்கு...!


கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு, கழகத் தோழர்கள் இனி யாரும் சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக கழகத்திற்கு நிதி வழங்கலாம். கழகப் பொதுச்செயலாளர் அவர்களுடன் முகப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் நிதியாக ரூபாய் 100/- வழங்க வேண்டும். கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளனர்.