காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவி, வகுப்புத்தோழியின் தாய் பணிபுரியும் அழகு நிலையத்திற்கு தோழியுடன் கண்புருவம் திருத்துவதற்காக சென்றுள்ளார்.
காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, தாயார் வேலை செய்து வந்த பியூட்டி பார்லருக்கு, தன் வகுப்பு தோழியை அழைத்துச் சென்றார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி (Karaikkudi) அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி, வகுப்புத்தோழியின் தாய் பணிபுரியும் அழகு நிலையத்திற்கு தோழியுடன் கண்புருவம் திருத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அழகு நிலைய பொறுப்பாளருடன் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ALSO READ | சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு மருத்துவர்கள் இருவர் கைது
இந்நிலையில் மாணவி பள்ளிக்கு சரியாக வருவதில்லை என பெற்றோருக்கு பள்ளியிலிருந்து தகவல் தெரிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரித்ததில் மேற்கண்ட தகவல் தெரிய வந்திருக்கிறது. இதன் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், தேவகோட்டை சேர்ந்த விக்னேஷ் (28), காரைக்குடியைச் சேர்ந்த லட்சுமி (45) அறந்தாங்கியை சேர்ந்த சிரஞ்சீவி மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் Pocso வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் லெட்சுமி, விக்னேஷ், சிரஞ்சீவி, ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில் என்ற நபரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் விவகாரங்கள் தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களில் பல பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் தகவல்கள் இருப்பது தெரியவந்திருப்பதாகவும் இதுபோன்ற செயல்களை வெகு நாட்களாக செய்து வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு முக்கிய குற்றவாளியான மன்ஸில் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அளித்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் அவரிடம் இது குறித்து தொடர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் மாணவிகளை கவனிக்க தவறிய ஆசிரியை ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளது. சக பள்ளி மாணவியருடன் ஏற்பட்ட கூட நட்பால் பள்ளி மாணவிக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை காரைக்குடியில் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR