பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பலரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த திருநாவுக்கரசு, சபரி, சதிஷ் மற்றும் வசந்தக்குமார் ஆகிய 4 பேரும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் புதன் கிழமை அன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.


இவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் சரியா அல்லது தவறா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நால்வரிடமும் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் நால்வர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது


--- பொள்ளாச்சி பாலியல் கொடூரம் ---


பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூர சம்பவங்கள் குறித்து சமீபத்தில் வெளியாகி, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இவ்விவகாரம் குறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, விவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 


இவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தடவியல் துறையிடம் ஆய்விற்காக ஒப்படைத்தனர். குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் பொள்ளாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.